சுத்திகரிப்பு சாதனங்கள்
தரம் மேம்படுத்துதல்
விதைக்குவியலிலிருந்து கலப்படம் மற்றும் தூய விதைகள் போல் அளவு மற்றும் வடிவம் கொண்டுள்ளவற்றை காற்றுத் தடுத்து தூய்மைப்படுத்தும் கருவி மூலம் மேலும் தூய்மைப்படுத்துதல் வேண்டும். தேவைப்படும் அளவிற்கு பெரியதாகவோ (அ) சிறியதாகவோ இருக்கும் விதைகள், உடைந்த, சிதைந்த மற்றும் குறையுள்ள விதைகள் போன்றவற்றை இந்த இறுதி நிலை சுத்திகரிப்பில் நீக்குதல் வேண்டும்.
ஒப்பு அடர்த்தி பிரிப்பான்
இந்த முறை விதைகளின் எடை மற்றும் மேல்ப்புற தன்மை போன்றவற்றை ஒருங்கிணைத்து செயல்படுகிறது. மிதவை என்னும் கோட்பாட்டில் இயங்குகிறது. ஒரு விதைக்கலவையை சாய்வான துளையுள்ள மேஜையின் கீழ் தளத்தில் வைக்கவேண்டும். துளையுள்ள மேஜை பகுதியில் காற்றை செலுத்தும் போது, விதைகள் அடர்த்தியின் படி அடுக்குகளாக அமைந்து, குறைந்த எடையுள்ள விதைகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் கீழும், அதிக எடையுள்ள விதைகள் மேலும் பிரிந்து செல்லும். மேஜையை ஒரு அலைவு இயக்கம் கொடுத்தால் விதைகள் மிதந்து வேகத்துடன் செல்லும். எடைக் குறைந்த விதைகள் மிதந்து சென்று கீழ் நோக்கியும், எடை அதிகமுள்ள விதைகள் மேஜையில் ஒட்டிக்கொண்டு மேல் நோக்கியும் விடுவிக்கப்படும். இந்தக் கருவி ஒரே அடர்த்தியில் வேறுபட்ட அளவுக் கொண்ட விதைகளையும், ஒரே அளவில் வேறுபட்ட அடர்த்திக் கொண்ட விதைகளையும் பிரிக்கும்.
|
|
ஒப்பு அடர்த்தி பிரிப்பான் |
|